தமிழ்நாடு

கருணாநிதியை சந்திக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் வருகை

கருணாநிதியை சந்திக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் வருகை

webteam

கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க நாளை மறுநாள் 5ஆம் தேதி சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரில் விசாரித்தனர். இதனைதொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் நேற்று நேரில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க நாளை மறுநாள் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார். முன்னதாக கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று சென்னை வர உள்ளார். இன்று மாலை 3 மணிக்கு அவர் காவேரி மருத்துவமனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.