தமிழ்நாடு

வயிற்றுப் பிழைப்பு - உயிரைப் பணயம் வைத்த மீனவர்கள்

வயிற்றுப் பிழைப்பு - உயிரைப் பணயம் வைத்த மீனவர்கள்

webteam

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில்,  மணிக்கு 40 முதல் 50கி.மி வேகத்தில் கடலில்  பலத்தகாற்று வீசக்கூடும்   என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும்  கடலுக்குச் செல்லக்கூடாது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து  ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் கீழக்கரை  உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைமுகங்களில் மீன் துறைசார்பில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச்செல்லக்கூடாது எனவும், உத்தரவு வரும்வரை  மீன்பிடி அனுமதி சீட்டு ரத்துசெய்யப்பட்டுள்ளது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை மீன் துறையினரின் எச்சரிகையை மீறி அரசால் வழங்கப்படும்  மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் ராமேஸ்வரம் , தொண்டி,  மண்டபம்  உள்ளிட்ட பகுதிகளில்  இரண்டாம் நாளாக சுமார் 5ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிககச்சென்றனர். இதனால் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது . மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என கேள்வி கேட்டு அவர்கள் கடலுக்குள் சென்றனர். 

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் நாகை கன்னியாகுமரி தூத்துக்குடி போன்ற துறைமுகங்களில் மீனவர்கள் முன்பு மீன் பிடிக்கச் சென்றுவிட்டனர் . அவர்கள் 20 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவார்கள். இந்நிலையில் எங்களை மட்டும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஏற்கனவே பல கஷ்டங்களை தாண்டி  வட்டிக்கு கடன் பெற்று தொழிலுக்குச்சென்றோம். வாங்கிய கடனை செலுத்த முடியாமல் திண்டாடி வரும் நிலையில் செல்லாதீர்கள் என சொன்னால் எப்படி ? ; நாங்கள் பிடித்துவரும் மீன்களுக்கு இங்குள்ள உள்ள ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து கிலோவுக்கு தலா ரூ 100முதல் 200வரை குறைத்து எங்களிடம் கொள்முதல் செய்துவருகின்றனர்  ஆகவே நெல்,கரும்பு போன்றவைகளைப்போல ஏற்றுமதியாகும் மீன்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்