செங்கல்பட்டு
செங்கல்பட்டு pt web
தமிழ்நாடு

செங்கல்பட்டு அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்; தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை பாதிப்பு

Angeshwar G

தூத்துக்குடியில் இருந்து வந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு - பரனூர் இடையே இரவு 10.30 மணியளவில் தடம் புரண்டது. சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் கீழே இயங்கியதால் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயில் இரும்புத் தகடுகள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து 42 பெட்டிகளுடன் இரும்புப் பொருட்களான ராடுகள், தகடுகள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் சென்று கொண்டிருந்தது. இரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு - பரனூர் இடையே சென்று கொண்டிருந்த போது ரயிலில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு தெரிவித்ததுடன், ஊழியர் வந்து பார்த்துள்ளனர். அப்போது 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக தண்டவாளமும் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி, பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழுப்புரத்தில் இருந்து 50 பணியாளர்கள் விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரவு நேரம் என்பதால் பணியில் சுணக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.