தமிழ்நாடு

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - புயலாக மாறுமா?

webteam

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

நிவர் புயல் தமிழக மக்களை அச்சுறுத்தி ஓய்ந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனக் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தெற்கு வங்க கடலில் மையப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தை தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக தெரிகிறது.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்திய வானிலை மையத்தின் காலை 09.30 மணி அறிக்கையின்படி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக,</p>&mdash; TN SDMA (@tnsdma) <a href="https://twitter.com/tnsdma/status/1333277971944075264?ref_src=twsrc%5Etfw">November 30, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>