முதலமைச்சர் ஆக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவைப் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
நாளை தமிழகத்தின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அவருக்கு பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகம், உள்துறை இலாகா, மாற்றுத் திறனாளிகள் நலன், சிறப்புத்திட்ட செயலாக்கம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் போன்ற இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.