தமிழ்நாடு

ஆ.ராசாவிற்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத்துறை! காரணம் இதுதான்!

ஆ.ராசாவிற்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத்துறை! காரணம் இதுதான்!

webteam

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. 

தற்போதைய திமுகவின் மக்களவை உறுப்பினராக உள்ள ஆ. ராசா கடந்த 2004-2007 காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமான முறையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக லஞ்சமாக பணம் பெற்றதாகவும், அந்த லஞ்சப்பணத்தில் ஆ. ராசா பினாமி நிறுவனத்தின் பெயரில் ரூ.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலம் வாங்கப்பட்டது என்றும், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள இந்த 45 ஏக்கர் நிலத்தை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆ. ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து தலைநகர் டெல்லி, தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தியது. மேலும் இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.