“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாவட்ட வாரியாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.
இந்தநிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாசி சிவகங்கைக்கு வரும் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்றார். இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி காரில் செல்லூர் ராஜூ ஏற முயன்ற போது அவரை ஏற வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோ குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் விளக்கம் கேட்ட போது,
”எடப்பாடி பழனிசாமிக்கு Y பிரிவில் இருந்து Z பிரிவு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்வு நடந்தது. பாதுகாவலர்கள் இருந்ததால் அடுத்த காரில் ஏறி சென்றேன்” என்று செல்லூர் ராஜூ விளக்கமளித்தார்.