தமிழ்நாடு

டெங்கு தடுப்பு ஆய்வு: தனியார் கல்லூரிக்கு அபராதம்

டெங்கு தடுப்பு ஆய்வு: தனியார் கல்லூரிக்கு அபராதம்

webteam

விருதுநகரில் டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மாவட்ட ஆட்சியர் சிவஞானம் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விருதுநகரில் உள்ள 5 தனியார் கல்லூரியில் ஆய்வு செய்தார். சிவகாசி சாலையில் உள்ள ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில், கல்லூரியின் பல பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாகி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த கல்லூரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு கொசுவை உருவாக்கும் வகையில் தண்ணீரை தேங்க வைப்பது, குப்பைகளை சேர்த்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் , கல்லூரிகள், கடைகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.