தமிழ்நாடு

டெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக ஜஸ்கிரீம் நிறுவனத்திற்கு அபராதம்

டெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக ஜஸ்கிரீம் நிறுவனத்திற்கு அபராதம்

webteam

திருவாரூரில் உள்ள ஜஸ்கிரீம் நிறுவனம் டெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக, மாவட்ட ஆட்சியர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். 

திருவாரூர் நகரின் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமையில் டெங்கு ஒழிப்பு ஆய்வு பணி நடைபெற்றது. அப்போது திருவாரூர் தெற்கு வீதி பகுதியில் உள்ள ஜஸ்கிரீம் நிறுவனத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் டெங்கு கொசு உற்பத்தி ஆவது கண்டறியப்பட்டது. இதனால் ஆட்சியர் அந்த நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக கூறி இதுவரை 2ஆயிரத்து 165 நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.