தமிழ்நாடு

டெங்கு ஒழிப்புப் பணிக்கு மாவட்டம்தோறும் உயர் அதிகாரி நியமனம்

Rasus

டெங்கு ஒழிப்பு பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட‌ந்தோறும் உயர் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டெங்கு ஒழிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ‌இதில் ‌தொடர்ந்து 15 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. டெங்கு ஒழிப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டுமென‌ உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், டெங்கு தடுப்பு பணிகள் குறித்து கண்காணிப்பு குழுவினர் தினந்தோறும் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிகள், கல்லூரிகள்‌, அரசு, தனியார் அலுவலக வளாகங்களில் டெ‌ங்கு ஒழிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவைப்படும் மருத்துவமனைகளிலும் கூடுதல் மரு‌த்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அனைத்து இடங்களிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். டெங்கு ஒழிப்பு பணிகளை ஒருங்கிணைக்கவும், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தேவைகளை நிறைவேற்றவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப்பணி நிலையிலுள்ள உயர் அதிகாரியை நியமித்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.