தமிழ்நாடு

கோவையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கலிலுல்லா

கோவையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சலின் பாதிப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது. மாநகர் பகுதியில் ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம் ஆயிரத்து 500 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.