தமிழ்நாடு

தொடரும் டெங்கு மரணங்கள்: ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு

தொடரும் டெங்கு மரணங்கள்: ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு

webteam

தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டையில் 8 மாத குழந்தை காய்ச்சலுக்கு உயிரிழந்தது. கரூரில் ஒரே நாளில் சிறுமி உட்பட 2 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். ஈரோடு ரயில்நகரைச்சேர்‌ந்த அயதுனிசா என்ற பெண் 20 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தார். திருச்சி - மண்ணச்சநல்லூர், மதுரை - பாலமேட்டைச் சேர்ந்த 2 சிறுமிகளும் டெங்குக்கு உயிர் தப்பவில்லை. மேட்டூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற டெங்கு முகாமிற்கு வந்த, ஆய்வக உதவியாளர் பயிற்சி மாணவியான 19 வயது வினித்ராவும் காய்ச்சலால் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் 3ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல்லில் வைரஸ் காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் உயிரிழந்தன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருவர், கோவையில் 3 பேர், புதுக்கோட்டையில் ஒருவர் என டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே செல்கிறது.