தமிழ்நாடு

டெங்கு பாதிப்புகளால் இன்று 10 பேர் உயிரிழந்தனர்

டெங்கு பாதிப்புகளால் இன்று 10 பேர் உயிரிழந்தனர்

webteam

டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகளால் இன்று 10 பேர் உயிரிழந்தனர். 

சேலம் மாவட்டத்தில் சிறுவன் மற்றும் கல்லூரி மாணவி என இருவர் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள ஆர்.கோம்பையைச் சேர்ந்த 24  வயது பெண் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சிப்பாய் நகரைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுவன், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள ரஸ்தாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.‌ சிவங்கை கல்லலைச் சேர்ந்த மகேஷ்வரன், மலைக்கண்டானைச் சேர்ந்த காவியா ஆகியோரும் உயிரிழந்தனர். விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தச்சூரையில் கலைவாணி என்பவர் உயிரிழந்தார். இவர்கள் தவிர கிருஷ்ணகிரியில் கர்ப்பிணி ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். மேலும் நெல்லையில் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார்.