தமிழ்நாடு

டெங்கு: மத்தியக்குழு ஆய்வு இன்றுடன் நிறைவு

டெங்கு: மத்தியக்குழு ஆய்வு இன்றுடன் நிறைவு

webteam

டெங்கு பாதிப்பு தொடர்பான ஆய்வுகளை மத்தியக்குழு இன்றுடன் நிறைவு செய்தது. 

தமிழகத்தில் டெங்கு குறித்து பாதிப்புகளை அறிய கடந்த 12ஆம் தேதி ஐந்து பேர் கொண்ட மத்தியக்குழு தமிழகம் வந்தது 13ஆம் தேதி சென்னையில் ஆய்வு செய்ததுடன், 14ஆம் தேதி இரு குழுக்களாக பிரிந்து சேலம் மற்றும் காஞ்சி மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். 
புதுச்சேரியில் ஆய்வு முடித்து சென்னை திரும்பிய குழுவினர், தலைமைச்செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதரத்துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், டெங்குவால் 40 பேரும், வகைப்படுத்தப்படாத காய்ச்சல்களால் 80 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். டெங்கு குறித்து விழிப்புணர்வு இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில்‌ உள்ள சிக்கல்களே நோயின் பரவல் அதிகரிக்கக் காரணம் என்று மத்திய ஆய்வுக்குழுவினர் தெரிவித்ததாகவும், தங்கள் ஆய்வின் அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும் என்று ஆய்வுக்குழு கூறியதாகவும் அவர் கூறினார். 
பின்னர் பேசிய மத்திய ஆய்வுக்குழு உறுப்பினர் கல்பனா பர்கா, டெங்கு ஒழிப்புப் பணிகளுக்காக தமிழகம் கோரிய ரூ.256 கோடி நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகமே முடிவு செய்யும் என்றும் என்று தெரிவித்தார்.