தமிழ்நாடு

எமனாய் உருவெடுக்கும் டெங்கு: கொசு வேடமணிந்து விழிப்புணர்வு

Rasus

புதிய தலைமுறையின் டெங்கு விழிப்புணர்வு முயற்சிக்காக, திருவாரூரில் கொசு வேடமணிந்து ஒருவர் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஏராளமானோர் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் "விழிப்புடன் இருப்போம் டெங்குவை ஒழிப்போம்" என்கிற நோக்கில் புதிய தலைமுறை இன்றைய நாள் முழுவதும் தொடர் நேரலையாக டெங்கு விழிப்புணர்வு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, இந்த செய்திகள் #LetsFightDengue ஹேஷ்டேக்கிலும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. பொதுமக்களும் புதிய தலைமுறையின் #LetsFightDengue என்கிற ஹேஷ்டேக்கில் தங்களது டெங்கு குறித்த கருத்துகளை பதிவு செய்வதால் #LetsFightDengue ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் புதிய தலைமுறையின் டெங்கு விழிப்புணர்வு முயற்சிக்காக, திருவாரூரில் கொசு வேடமணிந்து ஒருவர் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுகாதாரத்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் சங்கரன் என்பவர், புதிய தலைமுறைக்காக இந்த விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டார்.