கொசு உற்பத்திக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றுப்புறத்தை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும்படி வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1960களில் அம்மை நோய் பரவியபோது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றும் அதே போல் தற்போதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். அதன்படி விதி மீறுபவர்கள் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.