தமிழ்நாடு

கொசு உற்பத்தி செய்த தனியார் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல்   

webteam

பூவிருந்தவல்லி நகராட்சியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில், சுகாதாரமின்றி செயல்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

பூவிருந்தவல்லி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிக்காக மாவட்ட துணை ஆட்சியர் அப்துல் பாரி, நகராட்சி ஆணையர் டிட்டோ உட்பட சுகாதார பிரிவினர் 2 வது வார்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பாட்டில் மறு சுழற்சி செய்யும் தனியார் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது கூட்டம் கூட்டமாக லாவ புழுக்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து தொழிற்சாலைக்கு 1 லட்சம் அபராதம் விதித்ததனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டும் தொழிற்சாலை கவனக்குறைவாக இருந்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டும் இந்த தொழிற்சாலைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து சுகாதாரமின்றி செயல்பட்டு வந்ததால் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கையாக பூவிருந்தவல்லியில் தொழிற்சாலை ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.