தமிழ்நாடு

டெங்கு குறித்து தகவல் பெற தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Rasus

டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஏராளமானோர் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 104 என்ற எண்ணை பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். இதுதவிர 044-24350496, 044-24334811 மற்றும் 9444340496, 9361482899 ஆகிய எண்களிலும் பொதுமக்கள் டெங்கு குறித்த கூடுதல் தகவல்களை பெறலாம். அதுமட்டுமின்றி சுகாதார சீர்கேடு புகார்களுக்கும் மேற்கூறிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.