தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி தாமதம்!

சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி தாமதம்!

Rasus


தீ விபத்தால் ஸ்திரத்தன்மையை இழந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தாமதாமகியுள்ளன. இன்று அதிகாலை தொடங்கவிருந்த இடிக்கும் பணி சிறிது நேரம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. குவிந்துவரும் கட்டட இடிபாடுகளை அகற்றுவதற்கு நேரம் பிடிப்பதால், இடிக்கும் பணி தள்ளிப்போகியிருக்கலாம் எனத் தெரிகிறது. 

இடிபாடுகள் லாரிகள் மூலம் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென பிரத்யேகக் கருவி வரவழைக்கப்பட்டுள்ளது. இடிக்கும் பணியைக் கருத்தில் கொண்டு, சென்னை சில்க்ஸ் கடையின் சுற்றுப்பகுதியில் வசித்து வருவோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனிடையே, கடையின் ஐந்தாவது தளத்தில் நேற்றிரவு திடீரென தீ பரவியது. தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர்