தமிழ்நாடு

ஆய்வு செய்த ஆளுநருடன் மக்கள் கடும் வாக்குவாதம்

ஆய்வு செய்த ஆளுநருடன் மக்கள் கடும் வாக்குவாதம்

webteam

திருவாரூரில் ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் மக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கஜா புயல் பாதிப்புகள் குறித்து திருவாரூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். சேரி, கோட்டூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ஆளுநர், விளக்குடியிலுள்ள நிவாரண முகாமிலுள்ள மக்களை சந்திக்கச் சென்றார். அப்போது, 6 நாட்களுக்கு மேலாகியும் எந்த நிவாரண உதவிகளும் வழங்கவில்லை என மக்கள் ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் உரிய ‌நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, மேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநருக்காக காத்திருந்த போது, அவரது வாகனம் நிற்காமல் சென்றதால் மக்கள் வழிமறிக்க முயன்றனர். பின்னர் விழுந்து கிடந்த மரங்களை சாலையின் குறுக்கே தள்ளி அதிகாரிகளின் வாகனங்களை மக்கள் சிறைபிடித்தனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்ட ‌பகுதிகளுக்கு எந்த உதவிகளும் வந்து சேரவில்லை என மக்கள் வேதனையுடன் கூறினர்.