சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

’ஹேப்பி அண்ணாச்சி’ இபிஎஸ்.. அவதூறு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலகளித்தும் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

கோவை விமான நிலையத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகக் கூறி முன்னாள் அதிமுக எம்பி கேசி.பழனிச்சாமி கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

former admk kc palanisamy talked about Edappadi palaniswami

இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், விசாரணைக்காக ஏப்ரல் 15 ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலகளிக்க கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எடப்பாடி பழன்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு விளக்களித்த நீதிபதி, நான்கு வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி கேசி.பழனிச்சாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.