தமிழ்நாடு

புதிய அமைப்பை தொடங்கினார் தீபா

புதிய அமைப்பை தொடங்கினார் தீபா

webteam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை” என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

சென்னை தி.நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில், “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை” அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கொடியில் கருப்பு, சிவப்பு நிறத்துடன், நடுவில் வெள்ளை நிறத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இடம் பெற்றுள்ளது.

பின்னர் பேசிய தீபா, ஜெயலிதாவின் அரசியல் வாரிசாக பணிகளை தொடர்வேன் என கூறினார். தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா பிறந்தநாளில் தனது அரசியல் பயண முடிவை அறிவிப்பதில் பெருமையடைவதாக கூறிய அவர், மக்கள் விரும்பியதால் அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.