எம்ஜெடிஎம்கே என்ற புதிய அரசியல் கட்சியை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் இன்று தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அதிமுக, ஒபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்தது. சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்தனர். இதையடுத்து, எம்ஜிஆர். அம்மா தீபா பேரவையை அவர் தொடங்கினார். அதில் அவர் கணவர் மாதவனும் இருந்தார். நிர்வாகிகள் நியமனத்தில் மாதவனுக்கும் தீபாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாதவன் புதுக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். அதன்படி, மாதவன், புதிய கட்சியை ஜெயலலிதா சமாதியில் இன்று காலை தொடங்கினார். மாதவனின் கட்சிக் கொடியில் கருப்பு, சிவப்பு நடுவில் வெள்ளை, அதில் எம்ஜிஆர். ஜெயலலிதா புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், ஜெயலலிதாவின் கொள்கைதான் எனது கொள்கையும், ஜெயலலிதா, எம்.ஜிஆர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நான் தான் நிரப்ப முடியும். அதனால் புது கட்சி துவங்குகிறேன் என்று கூறியுள்ளார் மாதவன்.