தமிழ்நாடு

மது விருந்தும்.. சாலை விபத்தும்..

மது விருந்தும்.. சாலை விபத்தும்..

webteam

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மது விருந்து கேளிக்கைகளால் விபத்துகள் தொடர்வதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளதாகவும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 2016- ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி 140 விபத்துகள் நிகழ்ந்தன.

குடிபோதையில் கார் ஓட்டிய‌தால் நேரிட்ட விபத்துகளில் 112 பேர் காயம் அடைந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். 5 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, 120 விபத்துகள் நிகழ்ந்தன. 25 பேர் படுகாயமடைந்தனர். 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.