நெல்லை சாலைக்கு தொ.பரமசிவன் பெயர் web
தமிழ்நாடு

நெல்லை சாலைக்கு தொ.பரமசிவன் பெயர் சூட்ட முடிவு!

நெல்லை வடக்கு ஹைகிரவுண்டு சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

நெல்லை வடக்கு ஹைகிரவுண்டு சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் இதுதொடர்பான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொ.பரமசிவன் பெயர் சூட்ட முடிவு!

இதுகுறித்து பேசிய மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், சாலைக்கு தொ. பரமசிவன் பெயரை சூட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் நோக்கத்தில், அவரின் பெயரை சாலைக்கு சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பண்பாட்டு, சிறு தெய்வ வழிபாடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு நூல்களை எழுதியவர் தமிழறிஞர் தொ. பரமசிவன் என்பது நினைவுகூரத்தக்கது.