தமிழ்நாடு

டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு

டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு

webteam

டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்குகிறது. 

‘டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் வேண்டும் என மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘டிக்டாக்’ செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

இதனையடுத்து ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘டிக்டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது. இதனிடையே டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை ப்ளே ஸ்டோர் நீக்கியது.

இதைத்தொடர்ந்து டிக் டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் மதுரை கிளை இன்று விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் டிக் டாக் மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்குகிறது.