ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள டிசம்பர் 21ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் தேர்தல் நடைபெறும் டிசம்பர் 21ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் அருகே பணிபுரியும் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் தேர்தலில் யாருக்கு வெற்றி வரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. டிசம்பர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.