தமிழ்நாடு

சென்னை: திருமணத்தை மீறிய உறவு... இரண்டு பேரை எரித்துக் கொன்றவர் கைது..!

சென்னை: திருமணத்தை மீறிய உறவு... இரண்டு பேரை எரித்துக் கொன்றவர் கைது..!

webteam

பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவரை அப்பெண்ணின் கணவர், தீயிட்டு எரித்துக் கொலை செய்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் சூளைபள்ளம் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்முருகன். இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே எம்ஜிஆர் நகர் குப்பன் தெருவில் வசித்த வந்த காவலாளி கோவிந்தசாமி (62) என்பவருடன் லட்சுமிக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமியை செந்தில் முருகன் கண்டித்துள்ளார். ஆனால் இதனை கேட்காமல் லட்சுமி செந்தில் முருகனுடன் வாக்குவாதம் செய்து கோவிந்தசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த செந்தில் முருகன் நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு சென்று லட்சுமி மற்றும் கோவிந்தசாமியை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதில் லட்சுமி உயிரிழந்தார். 65 சதவித தீக்காயத்துடன் கோவிந்தசாமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமியும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதனால் செந்தில் வேல்முருகன் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.