தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்கு வீரப்பன் பெயரில் வந்த கொலை மிரட்டல் கடிதம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்கு வீரப்பன் பெயரில் வந்த கொலை மிரட்டல் கடிதம்

JustinDurai

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை, திரும்பப் பெற வேண்டும் எனவும், இல்லை என்றால் சுட்டு கொன்றுவிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது

கடிதத்தில் வீரப்பன் என கையெழுத்திடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கடிதம் தொடர்பாக சூரப்பா அளித்த புகாரின் அடிப்படையில், இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்த அன்பரை தேடி வருகின்றனர்.