குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் உத்தரவின்படி நவம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் தேர்வர்கள் அதிகம் பயன்பெறுவர்.
சமீபத்தில் போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தசூழலில் தான் அந்த அறிவிப்பின்படி தேர்வர்கள் பயனடையும் வகையில், அவர்களும் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவிருக்கும் நிலையில், அதனை நவம்பர் 8-ம் தேதி வரை நீட்டித்து டி.என்.பி.எஸ்.சி.செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 2026-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அனைத்து பிரிவினருக்கும் வயது உச்சவரம்பு 50 ஆண்டுகாலம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நிலையில் அதனை தொடர்ந்து தேர்வுஎழுதும் தேர்வர்களின் வசதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.