பிரபல ரவுடி ஸ்ரீதரின் உடலை கம்போடியாவிலிருந்து காஞ்சிபுரம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
பிரபல ரவுடி ஸ்ரீதரின் உடலை கம்போடியாவிலிருந்து சொந்த ஊரான காஞ்சிபுரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் தனலட்சுமி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் மனு அளித்துள்ளார். அதில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர் எங்கிருக்கிறார் என குடும்பத்தினருக்கு தெரியாத நிலையில், கடந்த 4ஆம் தேதி தன் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரியவந்தது என தனலட்சுமி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தந்தையின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.