தமிழ்நாடு

செல்ஃபி எடுத்தபோது விபரீதம்: வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

செல்ஃபி எடுத்தபோது விபரீதம்: வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

Rasus

மதுரையில் கரை புரண்டோடும் வைகை ஆற்றில் செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் தவறி விழுந்தான்.

ஜெயசூர்யா என்ற 14 வயது சிறுவனும், அவனது உறவினர் கோகுலகிருஷ்ணனும், வைகை ஆற்றை காண சென்றுள்ளனர். ஆற்றின் அருகே நின்றபடி இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது, இருவரும் நீரில் தவறி விழுந்தனர். அதில், கோகுலகிருஷ்ணன் உடனடியாக சுதாரித்து எழுந்துவிட்ட நிலையில், ஜெயசூர்யா நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான். தீயணைப்புத்துறையினர் 8 மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் சிறுவனை மீட்க முடியவில்லை. இரவானதால்
தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மீண்டும் இன்று தேடுதல் பணி தொடங்கப்படவுள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் தேவைக்காக இரு நாட்களுக்கு முன்பு வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடுவது குறிப்பிடத்தக்கது