தமிழ்நாடு

சுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்!

சுற்றுச்சுவரை இடித்துவிட்டு ஆபத்தான நிலையில் 3 மணி நேரம் பறந்த விமானம்!

webteam

திருச்சியில் இருந்து விமான நிலைய சுற்றுச்சுவரை இடித்துச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆபத்தான நிலை யிலேயே தொடர்ந்து 3 மணி நேரம் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, 130 பயணிகள் மற்றும் 6  ஊழியர்களுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நள்ளிரவு 1.19 மணியளவில் துபாய்க்கு புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்கும் போது, ஓடுதளபாதை வழிகாட்டும் மின்கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றில் விமானத்தின் சக்கரங்கள் மோதின. எனினும் சரியாக இயக்குகிறது என கருதி விமானம் தொடர்ந்து பறந்துள்ளது.

(நடுப்பகுதி சேதம்...)

ஆனால் பாதுகாப்பு கருதி, ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் மஸ் கட் வரை சென்ற விமானத்தை மீண்டும் மும்பைக்கு திரும்ப சொல்லி அவசரமாகத் தரையிறக்கினர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு மாற்று விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மும்பையில் அதிகாலை தரையிறங்கிய அந்த விமானத்தை சோதனை செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் விமானத்தில் நடுபகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளது. ஆபத்தான நிலையிலேயே இந்த விமானம் தொடர்ந்து 3 மணி நேரம் பறந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார். விமானம் மோதியதில் 5 மின்கோபுரங்களும், ஓடுபாதை மின் விளக்கும், சுற்றுச்சுவரும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.