தமிழ்நாடு

நிவர் புயல் எதிரொலி: காஞ்சிபுரத்தில் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

நிவர் புயல் எதிரொலி: காஞ்சிபுரத்தில் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

webteam

நிவர் புயல் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், கனமழை, பலத்தகாற்று காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 குடிசை வீடுகள் முற்றிலும் சேதமாகியுள்ளதாகவும் 12 கால்நடைகள் உயிரிழந்த நிலையில், 137 மரங்கள், 281 மின் கம்பங்கள், 9 மின் மாற்றிகள், சாய்ந்து சேதமாகியுள்ளதாகவும் மாவட்ட நிவாகம் தகவல் தெரிவித்துள்ளது.