தமிழ்நாடு

ஊரடங்கு காலத்தில் இணையத்தில் ட்ரெண்டாகும் டல்கோனா காஃபி..!

webteam

ஊரடங்கு காலத்தில் மக்கள் டிக்டாக், ஃபேஸ்புக் போன்றவற்றில் பொழுதை போக்கி வரும் அதேநேரத்தில் டல்கோனா காஃபி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். அதனால் பொழுதுபோக்கிற்காக தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள் வரை டிக்டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் உணவுப்பிரியர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருவதுதான் இந்த டல்கோனா காஃபி. நடிகைகள் மற்றும் உணவுப்பிரியர்கள் இதை ஒரு டாஸ்காகவே செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எளிய முறையில் தயாரித்துக்கொள்ள முடியும் என்பதாலேயே பலரும் இதை செய்து பார்க்கின்றனர். தற்போது இது மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. காஃபி தூள், சர்க்கரை, பால், சுடுதண்ணீர் ஆகியவை இருந்தாலே இதை செய்து விட முடியும். காஃபி தூள், சர்க்கரை, சுடுதண்ணீர் ஆகியவற்றை தலா 2 தேக்கரண்டி எடுத்து பொன்னிறமாக வரும் வரை அடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கூல் போன்ற கரைசலை நன்கு குளிரூட்டப்பட்ட பாலின் மேற்புறத்தில் படிய வைத்து விட்டால் டல்கோனா காஃபி ரெடி.