வெளி மாநிலங்களிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால் பருப்பு வகைகளின் விலை குறைந்துள்ளது.
விருதுநகர் பருப்பு சந்தையில், தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, மசூர் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் வெளி மாநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட பருப்பு வகைகள் இந்த ஆண்டு அதிகளவில் வர துவங்கியுள்ளதால் தற்போது விருதுநகர் பருப்பு சந்தையில் பருப்புக்கான மொத்த விலை கணிசமாக குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு 75 ரூபாயாக இருந்த துவரம்பருப்பின் விலை தற்பொழுது 60 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் 80 ரூபாயாக இருந்த உ.பருப்பின் விலை தற்பொழுது 70 ரூபாயாகவும் பாசிப்பருப்பு 62 ரூபாயாகவும் குறைந்துள்ளது. வெளி மாநிலங்களில் மழை பாதிப்பில்லாமல் முழுமையாக பயிறு சாகுபடியில் அறுவடை நடந்துள்ளதால் பருப்பின் மொத்த விலை கணிசமாக குறைந்துள்ளது. அதிக இருப்பு உள்ளதால் பருப்புகளின் விலை உயர வாய்ப்பு இல்லை. இங்கு பருப்பு அதிகளவில் தேக்கம் உள்ளதால் மத்திய அரசு தற்பொழுது இறக்குமதியை நிறுத்தியுள்ளதாகவும், ஏற்றுமதிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் பருப்பு மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்