தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,989ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரேநாளில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 1977ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 615 பேருக்கும், கோவையில் 501 பேருக்கும், திருவள்ளூரில் 212 பேருக்கும், மதுரையில் 194 கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் எட்டிய தொற்றின் அளவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே எட்டியுள்ளது. இதனால் சுகாதாரத்துறை கொரோனா மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரித்து வருவதுடன், தொற்றுநோய் பரவும் வேகம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.