தமிழ்நாடு

தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Sinekadhara

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்தது.

85,281 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 4260, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 16 பேர் என 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தைக் கடந்தது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 12 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆயிரத்து 1,869 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்து 415 ஆக உள்ளது.

சென்னையில் ஏற்கெனவே 1459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரேநாளில் பாதிப்பு எண்ணிக்கை 1520ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 427 பேருக்கும், செங்கல்பட்டில் 398 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.