தமிழ்நாடு

மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது - காவல்துறை எச்சரிக்கை

webteam

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என கிராமம் கிராமமாக ஒலிபெருக்கி மூலம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் இன்று முதல் 21 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், தங்கள் படகுகளையும் உடைமைகளையும் பத்திரமாக கரையினில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், கரை வலை மீன்பிடித்தல், ஆழ்கடல் மீன்பிடித்தல், ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்தல் ஆகிய எந்த விதமான மீன்பிடித் தொழிலும் செய்யவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு உத்தரவு வந்த பிறகே மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றும் மீன்வளத் துறையினர் மீனவர் கிராமங்களுக்கு நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி இருந்தனர். அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி, வானகிரி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் காவல்துறையினர் வாகனத்தில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.