தமிழ்நாடு

அரபிக்கடலில் நாளை உருவாகிறது டவ்-தே புயல்; இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் நாளை உருவாகிறது டவ்-தே புயல்; இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

JustinDurai

அரபிக்கடலில் நாளை டவ்-தே- புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் உருவாவதால் தமிழகம், கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இது நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இது குஜராத் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.