வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. இப்புயலுக்கு ‘மோன்தா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து சுமார் 420 கிமீ தொலைவில் மையம்கொடிருக்கும் மோன்தா புயல், மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்துவருகிறது..
நாளை மாலை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது.
மோன்தா புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், கேகே நகர், ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், கிண்டி, குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில் இரவு முழுவதும் மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும், நாளை காலை அல்லது பிற்பகலுக்கு பிறகு மழை குறைந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்களால் பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது..