மிக்ஜாம் புயல் உருவானது
மிக்ஜாம் புயல் உருவானது புதிய தலைமுறை
தமிழ்நாடு

வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது - இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜெனிட்டா ரோஸ்லின்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மிக்ஜாம் புயலாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, டிசம்பர் 4 ஆம் தேதி கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புயலாக மாறியுள்ளது. சென்னையில் இருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையமானது தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், மழை நிலவரம் குறித்து தன் சமூக வலைதளத்தில் சில விஷயங்கள் தெரிவித்துள்ளார்.

அதில், “மிக்ஜாம் புயல் அதன் பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடர்த்தியான மேகங்கள் வரப்போகின்றன; எனவே நாள் முழுக்க மிக மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னைக்கு மிக அருகில் புயல் வரப்போகிறது; எனவே அறிவிப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. இதுபோன்ற அதீத எச்சரிக்கைகளை 2015-ல் நவம்பர் 15, 16; 2016-ல் டிசம்பர் 11-12க்குப் பிறகு 2023 டிசம்பர் 3-4க்குதான் தெரிவிக்கிறேன். மேலும் 2015 வெள்ளம் அளவுக்கு இப்போது இருக்காது; என்றபோதிலும் ஒரே இடத்தில் 200 mm வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.