chennai rain update
chennai rain update PT
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் தற்போது எங்கு இருக்கிறது? அடுத்து நடக்கப்போவது என்ன? பாலச்சந்திரன் விளக்கம்

Rajakannan K

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன், இன்று இரவு வரை மழையும், காற்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், நாளையும் இந்த நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் புயலின் கண் பகுதி மையம் கொண்டுள்ளது. தென் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்டோடு கன மழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் தற்போது எங்கு இருக்கிறது? அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை இந்த காணொளியில் விளக்குகிறார் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 8.30 மணி நிலவரப்படி மழைப்பொழிவு நிலவரம்; பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செமீ மழைப் பதிவாகியுள்ளது. பெரும்பாலும் 20 செமீக்கும் மேல் மழைப்பதிவு பதிவாகியுள்ளது.

சென்னையில் மழை பாதிப்பு குறித்து புகார் அளிப்பதற்கான 1913 என்ற Bsnl இணைப்பு வேலை செய்யாததால் பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க 044-25619206,044 - 25619207, 044 - 25619208 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

பாதிப்பு குறித்து கேட்டறிந்தோம் - உதயநிதி ஸ்டாலின்

"மிக்ஜாம் புயல் காரணத்தால்,‌ சென்னையில் தொடர்ந்து கனமழையும் - காற்றும் வீசி வருகிற சூழலில், சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இன்று மதியம் ஆய்வு மேற்கொண்டோம். சென்னை மாநகராட்சி முழுவதும் தற்போது நிலவுகிற சூழல் - வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகள், வடிந்து கொண்டிருக்கும் இடங்கள் குறித்து அதிகாரிகள் - அலுவலர்களிடம் கேட்டறிந்தோம்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஓய்வே இல்லாமல் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.