வலுவிழந்தது ஃபெஞ்சல் புயல் pt web
தமிழ்நாடு

வலுவிழந்தது ஃபெஞ்சல் புயல்.. ஆனாலும் வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!

ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காலை 11.30 மணியளவில் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்மேற்கே 120 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் மேற்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும், இது மேலும் வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.