Cyclone Fengal  pt desk
தமிழ்நாடு

OMR,ECR சாலை மக்கள் கவனம் - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

PT WEB

ஃபெஞ்சல் புயல் (சனிக்கிழமையன்று) கரையைக் கடக்கும்போது, சென்னை, திருவள்ளுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல்

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதோடு, மாணாக்கருக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது பணியாளர்களை சனிக்கிழமையன்று வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ((சனிக்கிழமையன்று)) பிற்பகல் புயல் கரையை கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலையிலும் ஓ.எம்.ஆர். சாலையிலும் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல்

கன மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதை மக்கள் கண்டிப்பாக தவிர்க்குமாறும், பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள். கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.