FENGAL facebook
தமிழ்நாடு

மிக கனமழை முதல் அதீத கனமழை வரை இருக்கும்? 3 மணி நேரத்தில் உருவாகிறது FENGAL! என்ன நிலவரம்?

அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக் கடலில் FENGAL புயல் உருவாகிறது. தற்போது சென்னையில் இருந்து 380 கி.மீ., நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

3 மணி நேரத்தில் உருவாகிறது FENGAL!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவடைந்து புயலாகவே அது கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக் கடலில் FENGAL புயல் உருவாகிறது. தற்போது சென்னையில் இருந்து 380 கி.மீ., நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக கனமழை முதல் அதீத கனமழை வரை!

இந்தநிலையில், நாளை பிற்பகல் ஒரு மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம் மகாபலிபுரம் அருகே கரையை கடக்க தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று இரவு 7:00 மணி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை மாவட்டங்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து, இன்று இரவு 9 மணி முதல் நாளை இரவு 7 மணிக்குள் பரவலாக மிக கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யும். மேலும், குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

தீவிர புயல்

வடகடலோர மாவட்டங்களான சென்னை முதல் கடலூர் வரை தரைக்காற்றின் வேகம் இன்று இரவு முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச தொடங்கும் எனவும், புயல் கரையை கடக்கும் போது 80 முதல் 90 km வேகத்தில் சூறைக்காற்று வீசவாய்ப்பு என்வும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்தான கூடுதல் தகவல்களை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!