வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, “தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக் கடலில் FENGAL புயல் உருவாகிறது. தற்போது சென்னையில் இருந்து 380 கி.மீ., நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அங்கிருந்து 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது தாழ்வு மண்டலம். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.30) காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது.
புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரவு 7 மணி முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.