பிரதீப் ஜான் முகநூல்
தமிழ்நாடு

Cyclone Fengal புயல் கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம் - பிரதீப் ஜான் போட்ட பதிவு!

நாளை அதிகாலைக்குள் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

வங்கக்கடலில் உருவான புயலின் வேகம் அதிகரித்துள்ள சூழலில், சென்னையிலிருந்து 140 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. முதலில் பிற்பகலில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது , பிறகு மாலையில் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், இன்றிரவு - நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ” KTCC பகுதியில் குறிப்பாக சென்னைக்கு மேலே அடர்த்தியான மேகங்கள் உள்ளன. அடுத்த 12 மணிநேரத்தில் KTCC பகுதியில் மேகங்கள் தொடர்வதால் இங்கு அதிக மழை பெய்யும்.மேலும், KTCC பகுதிகளுக்கு அதிகளவு மழைப்பொழிவு கொடுக்கும் காலம்தான் இது. இரவு முதல் காலை 8.30 மணி வரை கே.டி.சி.சியில் 60-120 மிமீ மழை பெய்துள்ளது. அடுத்த 12 முதல் 18 மணிநேரம் இந்தப் பகுதிகளை கவனமாக கவனிக்க வேண்டும்.

Pradeep john

எங்கு கரையை கடக்கும்?

சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே மரக்காணம் முதல் மாமல்லபுரம் வரையில் எங்காவது புயல் கரையை கடக்கும். எனினும் புயல் கரையை கடக்கும் நேரம் மட்டும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பெரும்பாலும் இன்று இரவு முதல் டிசம்பர் 1 அதிகாலை இடையில் புயல் கரையை கடக்கலாம். புயல் கரையை கடக்கும் வரை KTCC பகுதியில் மழை பெய்யும்.

காற்று:

இன்று மாலையில் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கிமீ வரை வீசக்கூடும். இருப்பினும் காற்று அச்சுறுத்தலாக இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.