அண்ணா பல்கலை. குற்றவாளிக்கு மாவுக்கட்டு புதிய தலைமுறை
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு | சைபர் கிரைம் டிஎஸ்பி திடீர் விலகல் - பின்னணி என்ன?

தமிழகத்தை அதிரவைத்த அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் SIT குழுவிலிருந்து சைபர் கிரைம் DSP ரவி விலகியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jayashree A

தமிழகத்தை அதிரவைத்த அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் SIT குழுவிலிருந்து சைபர் கிரைம் DSP ரவி விலகியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 37 வயதான ஞானசேகரன் என்ற நபர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்படு குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

ஞானசேகரன்

ஞானசேகரன் மீது ஏற்கனவே பள்ளிக்கரணை, அமைந்தகரை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை அடுத்து இந்த வழக்கானது சிறப்பு புலனாய்வுக்குழு வசம் சென்றது. இந்நிலையில் இந்த வழக்கு விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அதிகாரிகள் தனது பணியை சரியாக செய்ய விடாமல் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி SIT குழுவில் இருந்து மாநில சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி விலகியுள்ளார்.

SIT குழுவிலிருந்து சைபர் கிரைம் DSP ரவி விலகியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.