அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் எம்.எல்.ஏ-வாக இருந்த செந்தில் பாலாஜி, அக்கட்சியின் பிளவிற்கு பின்னர் அமமுகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து திமுகவில் தற்போது எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவரது உதவியாளர் சுப்பிரமணியன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், மூர்த்திபாளையத்தில் சுப்பிரமணியனின் கொசுவலை தயாரிப்பு நிறுவனத்திலும் சுங்கத்துறை சோதனை நடந்து வருகிறது.